Posts

அகமுடையார் குலத் திலகம்-தென்னாட்டு ஜவஹர்-பட்டுக்கோட்டை வள்ளல், ஸ்ரீமான் வை.நாடிமுத்துப்பிள்ளை அவர்கள் (1902 -1954)

Image
பொன்னி நதி பாயும் வளம் கொழிக்கும் சோழ மண்டலத்தில் ஒர் அங்கமான பட்டுக்கோட்டையில் தோன்றி, சிறந்த பொது வாழ்வு வாழ்ந்து - பொது மக்களால் "தென்னாட்டு ஜவஹர்" என்று அழைக்கப்பட்டவர் பட்டுக்கோட்டை வை.நாடிமுத்துப் பிள்ளை (1902 -1954) அவர்கள், அவருடைய பொது வாழ்க்கை பணிகளை சுருக்கமாக காண்போம். பிறப்பு 1902 ஆம் ஆண்டு அக் -29, வைத்தியலிங்கத் தேவர்- கோவிந்தம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். திரண்ட சொத்துக்கும் மிகுந்த புகழுக்கும் உரியவரான திரு ஆ.பழனியப்ப தேவரின் பேரனான ஸ்ரீமான் வை.நாடிமுத்துப் பிள்ளை அவர்கள், தனது தாத்தாவின் மறைவுக்கு பின்னர் இந்த பெருநிதிக்கு உரியவரானார் என்றாலும் வசதி, வாய்ப்பு, செல்வம், செழிப்பு போன்றவைகள் மேலேங்கிய குடும்பத்தில் பிறந்தும் சிறைவாசம் என்ற போது சிரித்த முகத்தோடு ஏற்று தியாக செம்மலாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். நாடிமுத்து பிள்ளை அவர்களின் இளமைக் காலம், தம் ஆரம்ப கல்வியை வாரியப் பள்ளி (Board School) பயின்றார். பிறகு தனிப்பயிற்சி மூலம் (Tution) ஆங்கிலததில் சரளமாக பேசும், எழுதும் திறன் பெற்றார். இளம் வயதிலேயே இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசி

அகமுடையார் அரண் உங்களை வரவேற்கின்றது.

  அகமுடையார் அரண்  இணையதளம் உங்களை வரவேற்கின்றது.